அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 21, 2010

தோழர்களே!
வணக்கம். பதவி உயர்வு திட்டம் குறித்து வந்துள்ள விளக்கம் குறித்து விரிவாக தமிழில் எழுதியுள்ளோம். கவனமாக பார்க்கவும். ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் பலன் அல்லது நேரப்போகும் பாதகம் குறித்து விவரம் தாருங்கள். 21-8-10

Monday, August 16, 2010

தோழர்களே!
வணக்கம். இதயம் பூரித்த நன்றி. ஆக் 14 கிளைச்செயலர்கள் கூட்டம் பயனுள்ள வகையில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் நடந்தேறியுள்ளது. ஆக் 26 அன்று புதுச்சேரியில் கூடி மாநில சங்கம் கிளைச்செயலர்கள் தெரிவித்த கருத்துகளை ஒருமுகப்படுத்திக்கொள்ள இருக்கிறது.

ஆக் 21-25 நாட்களில் NFTE FNTO சந்திப்பு சிறப்புக்கூட்டங்களை நடத்திடவேண்டும். மாவட்ட சேவை மேம்பாட்டிற்கு தடையாகவுள்ள பிரச்சனைகளை தொகுத்து நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்திட வேண்டும். நமது மாவட்டம் இலாபம் தரும் மாவட்டமாக மாறிட செய்ய வேண்டியதென்ன என்பதில் கவனம் குவிப்பொம். வருவாய் பெருக்க உருப்படியான வழிகளை கண்டறிவோம். அவசியமெனில் இயக்கம் நடத்த திட்டமிடுவோம்.

BSNLEU சங்கத்தின் ஊழியர் பாதக உடன்பாடுகளை விளக்கிடுவோம். நாம் முன் வைக்கும் மாற்றுகளை எடுத்துரைப்போம்.

செலவு சிக்கனமான மாலைநேர கூட்டங்களாக அமைக்கலாம். BWA தலைவர்கள் அனைவரும் பயன்படும் கூட்டமாக அமைந்திடவேண்டும்.

வாழ்த்துக்கள்
அன்பன் பட்டாபி 17-8-10

Thursday, August 5, 2010

தோழர்களே!

வணக்கம். ஆக 14 கிளைச் செயலர்கள் கூட்டத்தை திட்டமிட்டு வெற்றிப்பெற செய்திட பணியாற்றி வருவீர்கள் என கருதுகிறோம். நமது வேலைமுறையில் புதுப்பாங்கினை கொணர ஆக 14 உதவும். செயல் முடுக்கம் -அடிமட்ட உறுப்பினர்களின் தேவை குறித்த உணர்வும் பலப்படும். தமிழகத்தில் நமது அனைத்து தலைவர்களும் கூடி விவாதிப்பது உற்சாகத்தை கூட்டும். ஆக உயர் விடயம் தொட்டு நம் அளவிலான பிரச்சனைகள்வரை கவனப்படுத்தல் நடைபெற வேண்டியது அவசியமானது.

மாவட்ட செயலர்களும் மாநில சங்க நிர்வாகிகளும் ஒருங்கிணைப்பையும் ஒத்திசைவையும் மேம்படுத்த உள்ளனர். வாழ்த்துக்கள் தோழர்களே!