அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Wednesday, February 9, 2011

Thursday, February 3, 2011

கலங்காதே தோழா தோல்வியும் உரமூட்டும்!

கடந்து வந்த நாட்களில் அஞ்சாமல் அலுப்பில்லாமல் நீ செய்திட்ட பணிகள் ஏராளம். அப்பணிகள் தேர்தலால் முடிந்து போகவில்லையே! தொடர்வதற்கு உன்னை வரித்துக் கொள்.

தொழிற்சங்க வேலையில் ஒரு பகுதி மட்டுமே தேர்தல். தேர்தலுக்காக மட்டுமே நமது தொழிற்சங்கத்தை நாம் துவக்கவில்லை. அதன் நீண்ட மரபுத் தொடர்ச்சியின் இன்றைய வாரிசுகள் நாம் என்ற எண்ணம் மேலோங்கட்டும். அது மாபெரும் விடுதலைக்கான பாதை. தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான பாதை. அது தேர்தல் எனும் முட்டுச்சந்துகளில் முடிவதில்லை.

வழக்கம் போல் சுறுசுறுப்பாக உற்சாகத்துடன் செயல்படு; அனைவருக்கும் நன்றி அறிவிப்பை நேரடியாக சென்று சொல். எந்த சக ஊழியரையும் சந்தேகப்பட வேண்டாம். ”எனக்கு வாக்களிக்கவில்லையே கவனித்துக் கொள்கிறேன்” என்றெல்லாம் வாக்குவாதங்களில் இறங்க வேண்டாம்.

தேர்தல் நாளன்று மருத்துவமனையில் இருந்து வலி வேதனை உபாதைகளை பொருட்படுத்தாமல் சலைன் பாட்டிலுடனும் சக்கர நாற்காலியுடனும் வந்து வாக்களித்த பெரு உள்ளங்கள் பரவசமூட்டுகின்றன. அவர்களுக்கெல்லாம் மாநில சங்கத்தின் தாள் பணிந்த வணக்கங்கள்.

ஏராள வேலைகள் முன் நிற்கின்றன. கடமைகளால் காலத்தை எதிர் கொள்வோம். முன்னேற்றங்கள் குறுக்கு வழிகளால் வருவதில்லை. தொழிலாளி வர்க்க உணர்வென்பது வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. தனி நபர் தாக்குதல்கள் தேவையில்லை. நமது கொள்கை- நிலைபாட்டின் வழி நின்று விவாதத்தை தொடருவோம். BSNL தொழிற்சங்க இயக்கங்கள் வெறுப்பை வெளியேற்றக் கற்றுக்கொள்ளட்டும்.
4-2-2011 நம்பிக்கையுடன், அன்பன் பட்டாபி

Sunday, January 16, 2011

தோழர்களே!
வணக்கம். தேர்தல் களத்தின் பரபரப்பில் இருப்பீர்கள். விவாதம் சூடு பிடித்துள்ளது. பல மாவட்ட சங்கங்கள் தங்கள் வலைப்பூ மூலம் ஏராள அறிக்கைகளை கொண்டு வருவது பாராட்டிற்குரியது. ஆரோக்கியமான விவாத முறையில் நல்ல பயிற்சி பெறுவது தொழிலாள வர்க்க கலாச்சாரமேன்மைக்குதவும்.

தொழிலாளர் பிரச்சனைகள் குறித்தும் நமது துறை குறித்தும் ஆழமான விவாதங்கள் வளர்வது அவசியமானது கூட. தேர்தல் பரபரப்பு முடிந்தபின்னர் நமது வாதங்கள் பிரச்சனை தீர்விற்கு உதவி வருகிறது என நாம் அறியும் போது நமது ஆற்றல் மட்டுமல்ல தொழிற்சங்க சேவை குறித்த தேவையும் நிறைவேறும்.

BSNLEU தங்களின் இயலாமையால் அதன் ந்ண்பர்களை இழந்துவிட்டது. NFTE FNTO சிறு சிதறல்களை பூதாகரமாக்கி அதன் மூலம் தானும் ஏமாந்து தொழிலாளர்களையும் ஏமாற்ற விழைகிறது. தான் சாதித்தவைகளை காட்டி ஓட்டு வாங்க முடியாதென்பது தெளிவான பின்புலத்தில் NFTEயை சிறிதாக சித்தரித்து குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கிறது. அதன் 6 ஆண்டு இருப்பில் தான் தொழிலாளர் வாழ்வே இருப்பதுபோல் அது பெருமைபட்டுக்கொள்கிறது. வரலாற்றின் இயங்குகதி குறித்து அறியாப்பிள்ளையைப்போல் அது நடந்து கொள்கிறது.

இத்தேர்தலில் NFTEக்கு தொழிலாளர்கள் தலைமை பாத்திரத்தை தர இருக்கிறார்கள். BSNLEU செய்திட்ட தவறுகளை சரி செய்வதும் அடிப்படையான அம்சங்களான BSNL Viability, Pension, Job Security என்ற three essentials மீது காப்புகளை உறுதி செய்வதும் ந்மது பொறுப்பாக அமையும்.