அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Thursday, April 7, 2011

அன்னா ஹசாரே எனும் போராளி



இந்த சம கால சமூகப் போராளியைப் பற்றி..,

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் ‘மாதிரி சிற்றூர்’ என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை…

* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், ‘அன்னா ஹசாரே’ என்று அழைக்கப்படுபவர்.

* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.

* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.

கிராம மேம்பாட்டுப் பணி…

* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.

பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.

* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.

* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.

* 1998-ல் சிவசேனா – பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தகவல் அறியும் சட்டம்…
* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்…

நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.

இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.

இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.

லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.

Sunday, April 3, 2011

VRS குறித்து அக் 2007ல் வெளியான கட்டுரை

rp vrs

Thursday, March 24, 2011

ஒலிக்கதிர் பிப் 2011

Olikkathir_0211

Monday, March 7, 2011

GPF பிரச்சனை

GPF பிரச்சனை
கடந்த இரு மாதங்களாக GPF எடுப்பதில் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கார்ப்பொரேட் அலுவலகத்தில் GPF நேரடியாக DOTஆல் deal செய்யப்படுகிறது. ஆனால் மாநிலங்களில் BSNL பொறுப்பெடுத்து செய்து வருகிறது. ஊழியர்களிடமிருந்து பெறப்படும் சந்தா, பிற பிடித்தங்களை மாதந்தோறும் 14 ஆம் தேதிக்குள் DOTக்கு மாநில நிர்வாகம் அனுப்பிவிடும். ஊழியர்கள் கோரக்கூடிய GPF முன்பணம் மற்றும் withdrawal க்கான தொகையை கார்ப்பொரேட் அலுவலகத்திலிருந்து பெற்று ஊழியருக்கு பட்டுவாட செய்திடும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்குரிய தொகையை பின்னர் DOT யிடமிருந்து பெற்று கார்ப்பொரேட் அலுவலகத்திற்கு மாநில நிர்வாகம் அனுப்பி வைக்கவேண்டும்.
இந்த நடைமுறை BSNLன் Cash Flow பிரச்சனை இல்லாதவரை சுமூகமாக போய்க் கொண்டிருந்தது. Cash Flow பிரச்சனையால் கேட்கின்ற GPF தொகையை கார்ப்பொரேட் அலுவலகத்திலிருந்து மாநில நிர்வாகங்களால் பெறமுடியாமல் ஊழியர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
உதாரணமாக தமிழகத்தில் ஊழியர்களிடமிருந்து பெறப்படும் 22 கோடி அளவிலான தொகையை DOTக்கு கட்டிவிட்டு ஊழியர்களுக்கு சராசரியாக தேவைப்படும் 15 கோடியை மாநில நிர்வாகம் கார்ப்பொரேட் அலுவலகத்திலிருந்து பெறவேண்டும். பிறகு DOTயிடமிருந்து அதைப்பெற்று ஆனால் அங்கிருந்து முழுமையாக பெறமுடியாமல் போவதால் பிரச்சனை உருவாகியுள்ளது. நமது தலைமையை இப்பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டியுள்ளோம். 22 கோடி GPF வரவு 15 கோடி பட்டுவாட மீதி 7 கோடி net மட்டும் DOTக்கு கட்டுகிறோம் என்றநிலை இருந்தால் Cash Flow பிரச்சனை சற்று குறையும். பட்டுவாடா தட்டுப்பாடும் நீங்கும் என கருதுகிறோம். உரிய மட்ட்த்தில் இப்பிரச்சனையை எடுத்து தீர்க்க முயற்சித்து வருகிறோம்
7-3-10