மாநில மாநாடு திட்டமிட்டப்படி மார்ச் 7,8 தேதிகளில் தஞ்சையில் நடைபெறுகிறது. செயற்குழு மார்ச் 6 கூடுகிறது.வரவேற்புக் குழு 29-1-2010 அன்று தஞ்சையில் கூடி நிதி ஆதாரங்களை பரிசீலித்தது.
வரவேற்புக் குழு கூட்டத்தில் தோழர்கள் தமிழ்மணி, பட்டாபி, ஜெயராமன், ஜெயபால், சேது நேரிடையாக பங்கேற்றனர். வரவேற்புக் குழு பொதுச் செயலர் பிரின்ஸ், மாவட்ட செயலர் நடராஜன், குடந்தை பாஸ்கரன் நடந்த – நடக்க வேண்டிய வேலைகளை விளக்கிப் பேசினர். மாவட்டத்தின் முன்னோடி தலைவர்கள் நிதி ஆதாரங்களுக்கான உத்தரவாதத்தை நல்கினர்.
மாநாட்டு மண்டபம், தங்கும் வசதி, பெண்களுக்கான வசதி, உணவு, விளம்பரம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து அனுபவங்களை தமிழ்மணி, பட்டாபி, ஜெயராமன், ஜெயபால், சேது பகிர்ந்து கொண்டனர். வரவேற்புக் குழுவிற்கு அனத்துவகை உதவிகளையும் செய்திட உறுதி அளித்து உற்சாகமூட்டினர்.
தோழர் குப்தா, சஜ்வானி, கோஹ்லி, இஸ்லாம், மதிவாணன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களை அழைப்பது- நமது தலைவர்கள் ஆர் கே, முத்தியாலு, மாலியுடன் தொழிற்சங்க தலைவர்கள் ஏ எம் கோபு மற்றும் எஸ் எஸ் தியாகராஜனை பங்கேற்க செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. பிற மாநில செயலர்களை அழைப்பது -கருத்தரங்கில் மாநில மட்ட மற்றும் தஞ்சை அதிகாரிகளையும், மகளிர் தின நிகழ்வு- காலநிலை மாற்ற சிறப்பு கருத்தரங்கினை ஏற்பாடு செய்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டை தோழர் ஆர் கே வை துவக்கி வைக்க வேண்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
விளம்பர அம்சங்களுக்கு ஜெயபால், அச்சடிப்பிற்கு சேது வழிகாட்டுவர். பிப்ரவரி 10 அன்று வரவேற்புக் குழு அடுத்து கூடும். தோழர்கள் ஜெயராமன் சேது ஜெயபால் வந்திருந்து வழிகாட்டுவர்.
மாவட்ட செயலர்கள் சார்பாளர்கள் எண்ணிக்கை குறித்து உடன் தெரிவிக்க வேண்டுகிறோம். தங்கள் பங்கிற்கான நிதிதனை அனுப்ப வேண்டுகிறோம்.
30-1-2010
No comments:
Post a Comment