செப்டம்பர் 7 வேலைநிறுத்தத்தில் தமிழகத்தின் பெரும்பான்மை ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஊழியர்களில் சிலர் ஊதிய இழப்பை கருத்தில் கொண்டு விடுப்பு தெரிவித்து தங்கள் ஆதரவை காட்டியுள்ளனர். வேலைக்கு வந்தவர்கள் மிகக் குறைவே. 11000க்கும் மேற்பட்ட ஊழியர் அதிகாரிகள் ஊதிய இழப்பை பொறுத்துக் கொண்டு தேச முழுதும் போராடிய தொழிலாளர்களுடன் நின்றது பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியது.
உங்களது போராட்டம் வீண்போகாது. ஏழை எளியவர் துயர் துடைக்கும் பொறுப்புணர்ந்து அவர்களுக்கு நியாயம் கேட்ட உங்களது வீரத்தையும் மனிதாபிமான குணத்தையும் போற்றிட வார்த்தைகள் போதாது. உணவு தானியங்கள் வீணாகி மக்க அனுமதியோம்- வறியவர்களுக்கு மலிவு விலையில் அதை வழங்கிட வைப்போம் என்பதற்கு நீதிமன்றம் வடிவம் கொடுத்துள்ளது.
திரட்டப்படாத தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் மேம்பட்ட ஷரத்துக்களைப் பெற நமது போராட்டம் வழிவகுக்கும். தேசத்தில் உலகமய தாக்கத்தால் வீழ்ந்துபோன கூட்டுப்பேர உரிமை மீண்டும் மரியாதை பெறும் . ஒன்றுபடதெரியாதவன் தொழிலாளி என்ற அவப்பெயர் இனி இல்லை. தன்னைப்பேணி தொழிலாளி என்ற இழி பட்டம் கிழிந்து போனது. பிறர் துயர் காண சகியான் தொழிலாளி என்ற உயர் குணம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் செய்து ஊதியம் இழக்கப்போகும் எவரும் ஏமாளி என்று நொந்து கொள்ளதேவையில்லை. மானுட
No comments:
Post a Comment