போனஸ்
முப்பதாண்டுகளாக பூஜைக்கு முன் போனஸ் என்ற உரிமை இவ்வாண்டு பாழ்பட்டுள்ளது.. முன்முயற்சி எடுக்கவேண்டிய BSNLEU தனக்கு தார்மீக உரிமை இல்லை என்று மனதார ஏற்றுக்கொண்டு போனஸ் பிரச்சனையை காலத்தில் எடுக்க தவறியது. ஊழியர்களின் மனநிலையையும் அதற்கேற்ப தயாரிக்கும் பணியில் அச்சஙகத்த்லைமை ஈடுபட்டது. நல்ல இலாபம் வந்தபோது 10000 கூட வாங்கினீர்களே- நட்டம் ஆகையால் போனஸ் கிடக்காது என்று கூட பேசினர்.
ஆனால் ஜலந்தரில் கூடிய NFTE இப்பிரச்சனையை உரிமை போராட்டமாக்கியது. போராட்ட அறைகூவலை விடுத்தது. NFTEன் அறைகூவல் கண்டு குற்றவுணர்வு கொண்ட BSNLEU தானும் தன் சிறகை விரித்து ஆர்ப்பாட்டம் என்றது. ஒருவேளை போனஸ் கிட்டாமல் போய்விட்டால் பழியை தான் மட்டும் சுமக்கமுடியாது என்ற எண்ணத்தில் பெரியமனதுடன் JAC போராட்டமாக்கிட முன்வந்தது. போனஸ் உரிமை அதை விட்டு கொடுக்கமுடியாது என்ற பார்வை அதற்கு மழுங்கிவிட்டது. எனவே கமிட்மெண்ட் இல்லை.
2005ல் தான் ஏற்றுக்கொண்ட போனஸ் பார்மூலாவை மாபெரும் சாதனை என அச்சங்கம் மார்தட்டியது. ஆனால் தான் ஏற்ற அதே வழிகாட்டலால்தான் இன்று பிரச்சனை என்பதை மூடி மறைக்கிறது BSNLEU. DOTன் 13-10-05 வழிகாட்டுதலில் உள்ள இலாபம் இல்லையெனில் போனஸ் இல்லை என்ற அம்சத்தை BSNLEU ஏற்றுக்கொண்டதால்தான் நிர்வாகம் நட்டத்தைக்காட்டி அடம் செய்கிறது.
DOT வழிகாட்டுதலில் இலாபம் வரவில்லையெனில் மத்திய அரசு பணியாளர்களுக்கு தரப்படும் குறைந்தபட்ச adhoc bonus என்ற திருத்தத்தை செய்திருந்தால் இன்று பிரச்சனை வந்திருக்காது. போனஸ் 3500 ஆவது பூஜைக்கு முன்னர் கிடைத்திருக்கும். தவறியது BSNLEU. DOTன் 13-10-05 வழிகாட்டல் மாற்றப்படவேண்டிய அவசியத்தை அனைவரும் உணரவேண்டிய தருணமிது.
நிர்வாகம் காட்டும் நட்டக்கணக்கை நாம் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். 2003ல் தோழர் குப்தா அதை செய்தார். அதன் விவரத்தை நமது இணைய தளத்தில் நினைவிற்காக வெளியிட்டிருந்தோம். மூன்று ஆண்டுகளுக்கான நிலுவை- பென்ஷன் நிலுவை- வாராக்கடன், பில் தகராறு- கூடுதலான தேய்மான கணக்கு போன்ற பல்வேறு செலவு கணக்க்கை காட்டி நட்டம் சொல்லப்படுகிறது. ஊரகசேவை நட்டத்தை செலாவாக்கி நம்மை வஞ்சிக்கின்றனர். 2003ல் தோழர் குப்தா வேலைநிறுத்த அறிவிப்பை மற்றவர்களையும் இணைத்து செப் 2003ல் காலத்தில் தந்தார். 1000 என்ற போனஸ் adhoc வடிவில் 4500- 75% என்று மாறியது. விடுபட்ட 25% கிடைக்கவும் உறுதியானது..
தலைமையின் முன்முயற்சி, ஒன்றுபட்ட போராட்டத்தின்பாற் பற்றுறுதி இருந்திருந்தால் இவ்வாண்டும் போனஸ் பிரச்சனை பூஜைக்கு முன்னரே தீர்ந்திருக்கும். நட்டம் என்ற பெயரில் நிர்வாகமும் போனஸ் உடன்பாட்டை ஏற்ற நிலையில் BSNLEUவும் போனஸ் உரிமை இழப்பிற்கு பொறுப்பேற்கவேண்டும்.
ஊழியர்கள் போரடி பெற்ற போனஸ் உரிமையை இழக்க தயாரில்லை.
31-10-10
No comments:
Post a Comment