அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Saturday, January 30, 2010

தோழர் ஞானையாவிற்கு கோவையில் விழா


வருக தோழர்களே

மாநிலமாநாடு வரவேற்புக்குழு கூட்டம்

மாநில மாநாடு திட்டமிட்டப்படி மார்ச் 7,8 தேதிகளில் தஞ்சையில் நடைபெறுகிறது. செயற்குழு மார்ச் 6 கூடுகிறது.வரவேற்புக் குழு 29-1-2010 அன்று தஞ்சையில் கூடி நிதி ஆதாரங்களை பரிசீலித்தது.

வரவேற்புக் குழு கூட்டத்தில் தோழர்கள் தமிழ்மணி, பட்டாபி, ஜெயராமன், ஜெயபால், சேது நேரிடையாக பங்கேற்றனர். வரவேற்புக் குழு பொதுச் செயலர் பிரின்ஸ், மாவட்ட செயலர் நடராஜன், குடந்தை பாஸ்கரன் நடந்த – நடக்க வேண்டிய வேலைகளை விளக்கிப் பேசினர். மாவட்டத்தின் முன்னோடி தலைவர்கள் நிதி ஆதாரங்களுக்கான உத்தரவாதத்தை நல்கினர்.

மாநாட்டு மண்டபம், தங்கும் வசதி, பெண்களுக்கான வசதி, உணவு, விளம்பரம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து அனுபவங்களை தமிழ்மணி, பட்டாபி, ஜெயராமன், ஜெயபால், சேது பகிர்ந்து கொண்டனர். வரவேற்புக் குழுவிற்கு அனத்துவகை உதவிகளையும் செய்திட உறுதி அளித்து உற்சாகமூட்டினர்.

தோழர் குப்தா, சஜ்வானி, கோஹ்லி, இஸ்லாம், மதிவாணன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களை அழைப்பது- நமது தலைவர்கள் ஆர் கே, முத்தியாலு, மாலியுடன் தொழிற்சங்க தலைவர்கள் ஏ எம் கோபு மற்றும் எஸ் எஸ் தியாகராஜனை பங்கேற்க செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. பிற மாநில செயலர்களை அழைப்பது -கருத்தரங்கில் மாநில மட்ட மற்றும் தஞ்சை அதிகாரிகளையும், மகளிர் தின நிகழ்வு- காலநிலை மாற்ற சிறப்பு கருத்தரங்கினை ஏற்பாடு செய்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டை தோழர் ஆர் கே வை துவக்கி வைக்க வேண்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

விளம்பர அம்சங்களுக்கு ஜெயபால், அச்சடிப்பிற்கு சேது வழிகாட்டுவர். பிப்ரவரி 10 அன்று வரவேற்புக் குழு அடுத்து கூடும். தோழர்கள் ஜெயராமன் சேது ஜெயபால் வந்திருந்து வழிகாட்டுவர்.

மாவட்ட செயலர்கள் சார்பாளர்கள் எண்ணிக்கை குறித்து உடன் தெரிவிக்க வேண்டுகிறோம். தங்கள் பங்கிற்கான நிதிதனை அனுப்ப வேண்டுகிறோம்.
30-1-2010

Thursday, January 28, 2010

கிராக்கிப்படி உத்தரவு

கிராக்கிப்படி உத்தரவு 1997 ஊதிய நிலைகளில் உள்ளோருக்கும் DPE ஆல் 28-01-10 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

கிராக்கிப்படி உத்தரவு

Wednesday, January 27, 2010

மாநிலச் செயலர் உண்ணாநோன்பு அறிவிப்பு

காரைக்குடி மாவட்டச்செயலர் தோழர் மாரி பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. குறையை சரிசெய்து காரைக்குடியில் பதவி உயர்வு தரக்கோரி பிப்ரவரி 1 முதல் மாநிலச் செயலர் உண்ணாநோன்பு போராட்டத்தை அறிவித்து நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளார். போராட்டத்தை வெற்றிகரமாக்கிடுவோம்
27-1-10

Monday, January 25, 2010

துறைமுக ஊதிய உடன்பாடு



துறைமுக தொழிற்சங்கங்களின் ஊதிய உடன்பாடு

5 ஆண்டுகள் அடிப்படையில் 78.2 சத கிராக்கிப்படி இணைப்புடன் 23 சத ஊதிய உடன்பாடு BWNC ல் எட்டப்பட்டுள்ளது. BWNC ல் IPA Chairman ஊதிய கமிட்டி தலைவராகவும் இருந்தார். HMS மட்டும் பதவி உயர்வு வேறுபாட்டால் கையெழுத்திடவில்லை. 24-1-2010

மாவட்ட செயலர்களுக்கு

தோழர்களே,
வணக்கம். மாநில மாநாட்டு வேலைகளில் தஞ்சை தோழர்கள் ஈடுபாட்டுடன் இறங்கியுள்ளனர். மார்ச் 6 மாலை செயற்குழு நடைபெறும். மார்ச் 7,8 நாட்களில் மாநாடு. மாவட்ட செயலர்கள் எவ்வளவு தோழர்கள் வருவர் என்பதை பிப்ரவரி 10க்குள் வரவேற்பு குழுவிற்கு/ மாநில சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். மாநாடு திட்டமிடலுக்கு இவ்விவரம் அவசியம்.
மாவட்டங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரைவில் ஒப்படைக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
பட்டாபி 25-1-10

Sunday, January 24, 2010

முழு ஓய்வூதியம்

33 வருடங்கள் இருந்தால் மட்டுமே முழு ஓய்வூதியம் என்பதை தளர்த்தி பென்ஷன் இலாகா வெளியிட்ட (10-12-09) உத்தரவை DOT வழிகாட்டுதலில் BSNL endorse(22-1-2010)செய்துள்ளது. 1-1-2006 முதல் இந்த தளர்வு அமுலாகும்

Thursday, January 21, 2010

DA உத்தரவு

அதிகாரிகளுக்கு கிராக்கிப்படி 5.6 சத (25.3-30.9) உத்தரவு ஜன 19 அன்று பி எஸ் என் எல் ஆல் வெளியிடப்பட்டுள்ளது

Wednesday, January 20, 2010

BHEL ஊதிய உடன்பாடு

BHEL ஊதிய உடன்பாட்டில் AITUC, CITU, BMS கையெழுத்திடவில்லை . INTUC, DMK,HMS மட்டுமே 30 சதம் 78.2 10 ஆண்டுகள் ஏற்று MOU ல் கையெழுத்திட்டுள்ளன. AITUC, CITU, BMS 5 ஆண்டுகள் கோரி வற்புறுத்தி வருகின்றன. 5 ஆண்டுகள் எனில் 20 சதம் மட்டுமே என்றது நிர்வாகம்

Tuesday, January 19, 2010

ஊதிய உடன்பாடா பரிந்துரையா – தெரிந்து கொள்ள படியுங்கள்
நமது இணையதள கட்டுரையை...

பங்கு விற்பனை 2010-11ல் திட்டமிடுகிறோம் என்கிறார்-பங்கு விற்பனை துறை செயலர் 20-1-10
அனைவருக்கும் வணக்கம் மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ உங்களை அன்புடன் வரவேற்கிறது