அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது
Monday, December 13, 2010
Sunday, November 28, 2010
Sunday, November 21, 2010
Monday, November 1, 2010
போனஸ்
முப்பதாண்டுகளாக பூஜைக்கு முன் போனஸ் என்ற உரிமை இவ்வாண்டு பாழ்பட்டுள்ளது.. முன்முயற்சி எடுக்கவேண்டிய BSNLEU தனக்கு தார்மீக உரிமை இல்லை என்று மனதார ஏற்றுக்கொண்டு போனஸ் பிரச்சனையை காலத்தில் எடுக்க தவறியது. ஊழியர்களின் மனநிலையையும் அதற்கேற்ப தயாரிக்கும் பணியில் அச்சஙகத்த்லைமை ஈடுபட்டது. நல்ல இலாபம் வந்தபோது 10000 கூட வாங்கினீர்களே- நட்டம் ஆகையால் போனஸ் கிடக்காது என்று கூட பேசினர்.
ஆனால் ஜலந்தரில் கூடிய NFTE இப்பிரச்சனையை உரிமை போராட்டமாக்கியது. போராட்ட அறைகூவலை விடுத்தது. NFTEன் அறைகூவல் கண்டு குற்றவுணர்வு கொண்ட BSNLEU தானும் தன் சிறகை விரித்து ஆர்ப்பாட்டம் என்றது. ஒருவேளை போனஸ் கிட்டாமல் போய்விட்டால் பழியை தான் மட்டும் சுமக்கமுடியாது என்ற எண்ணத்தில் பெரியமனதுடன் JAC போராட்டமாக்கிட முன்வந்தது. போனஸ் உரிமை அதை விட்டு கொடுக்கமுடியாது என்ற பார்வை அதற்கு மழுங்கிவிட்டது. எனவே கமிட்மெண்ட் இல்லை.
2005ல் தான் ஏற்றுக்கொண்ட போனஸ் பார்மூலாவை மாபெரும் சாதனை என அச்சங்கம் மார்தட்டியது. ஆனால் தான் ஏற்ற அதே வழிகாட்டலால்தான் இன்று பிரச்சனை என்பதை மூடி மறைக்கிறது BSNLEU. DOTன் 13-10-05 வழிகாட்டுதலில் உள்ள இலாபம் இல்லையெனில் போனஸ் இல்லை என்ற அம்சத்தை BSNLEU ஏற்றுக்கொண்டதால்தான் நிர்வாகம் நட்டத்தைக்காட்டி அடம் செய்கிறது.
DOT வழிகாட்டுதலில் இலாபம் வரவில்லையெனில் மத்திய அரசு பணியாளர்களுக்கு தரப்படும் குறைந்தபட்ச adhoc bonus என்ற திருத்தத்தை செய்திருந்தால் இன்று பிரச்சனை வந்திருக்காது. போனஸ் 3500 ஆவது பூஜைக்கு முன்னர் கிடைத்திருக்கும். தவறியது BSNLEU. DOTன் 13-10-05 வழிகாட்டல் மாற்றப்படவேண்டிய அவசியத்தை அனைவரும் உணரவேண்டிய தருணமிது.
நிர்வாகம் காட்டும் நட்டக்கணக்கை நாம் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். 2003ல் தோழர் குப்தா அதை செய்தார். அதன் விவரத்தை நமது இணைய தளத்தில் நினைவிற்காக வெளியிட்டிருந்தோம். மூன்று ஆண்டுகளுக்கான நிலுவை- பென்ஷன் நிலுவை- வாராக்கடன், பில் தகராறு- கூடுதலான தேய்மான கணக்கு போன்ற பல்வேறு செலவு கணக்க்கை காட்டி நட்டம் சொல்லப்படுகிறது. ஊரகசேவை நட்டத்தை செலாவாக்கி நம்மை வஞ்சிக்கின்றனர். 2003ல் தோழர் குப்தா வேலைநிறுத்த அறிவிப்பை மற்றவர்களையும் இணைத்து செப் 2003ல் காலத்தில் தந்தார். 1000 என்ற போனஸ் adhoc வடிவில் 4500- 75% என்று மாறியது. விடுபட்ட 25% கிடைக்கவும் உறுதியானது..
தலைமையின் முன்முயற்சி, ஒன்றுபட்ட போராட்டத்தின்பாற் பற்றுறுதி இருந்திருந்தால் இவ்வாண்டும் போனஸ் பிரச்சனை பூஜைக்கு முன்னரே தீர்ந்திருக்கும். நட்டம் என்ற பெயரில் நிர்வாகமும் போனஸ் உடன்பாட்டை ஏற்ற நிலையில் BSNLEUவும் போனஸ் உரிமை இழப்பிற்கு பொறுப்பேற்கவேண்டும்.
ஊழியர்கள் போரடி பெற்ற போனஸ் உரிமையை இழக்க தயாரில்லை.
31-10-10

Tuesday, October 12, 2010
Friday, September 10, 2010
Thursday, September 9, 2010
செப்டம்பர் 7 வேலைநிறுத்தத்தில் தமிழகத்தின் பெரும்பான்மை ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஊழியர்களில் சிலர் ஊதிய இழப்பை கருத்தில் கொண்டு விடுப்பு தெரிவித்து தங்கள் ஆதரவை காட்டியுள்ளனர். வேலைக்கு வந்தவர்கள் மிகக் குறைவே. 11000க்கும் மேற்பட்ட ஊழியர் அதிகாரிகள் ஊதிய இழப்பை பொறுத்துக் கொண்டு தேச முழுதும் போராடிய தொழிலாளர்களுடன் நின்றது பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியது.
உங்களது போராட்டம் வீண்போகாது. ஏழை எளியவர் துயர் துடைக்கும் பொறுப்புணர்ந்து அவர்களுக்கு நியாயம் கேட்ட உங்களது வீரத்தையும் மனிதாபிமான குணத்தையும் போற்றிட வார்த்தைகள் போதாது. உணவு தானியங்கள் வீணாகி மக்க அனுமதியோம்- வறியவர்களுக்கு மலிவு விலையில் அதை வழங்கிட வைப்போம் என்பதற்கு நீதிமன்றம் வடிவம் கொடுத்துள்ளது.
திரட்டப்படாத தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் மேம்பட்ட ஷரத்துக்களைப் பெற நமது போராட்டம் வழிவகுக்கும். தேசத்தில் உலகமய தாக்கத்தால் வீழ்ந்துபோன கூட்டுப்பேர உரிமை மீண்டும் மரியாதை பெறும் . ஒன்றுபடதெரியாதவன் தொழிலாளி என்ற அவப்பெயர் இனி இல்லை. தன்னைப்பேணி தொழிலாளி என்ற இழி பட்டம் கிழிந்து போனது. பிறர் துயர் காண சகியான் தொழிலாளி என்ற உயர் குணம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் செய்து ஊதியம் இழக்கப்போகும் எவரும் ஏமாளி என்று நொந்து கொள்ளதேவையில்லை. மானுட

Saturday, August 21, 2010
Monday, August 16, 2010
தோழர்களே!
வணக்கம். இதயம் பூரித்த நன்றி. ஆக் 14 கிளைச்செயலர்கள் கூட்டம் பயனுள்ள வகையில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் நடந்தேறியுள்ளது. ஆக் 26 அன்று புதுச்சேரியில் கூடி மாநில சங்கம் கிளைச்செயலர்கள் தெரிவித்த கருத்துகளை ஒருமுகப்படுத்திக்கொள்ள இருக்கிறது.
ஆக் 21-25 நாட்களில் NFTE FNTO சந்திப்பு சிறப்புக்கூட்டங்களை நடத்திடவேண்டும். மாவட்ட சேவை மேம்பாட்டிற்கு தடையாகவுள்ள பிரச்சனைகளை தொகுத்து நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்திட வேண்டும். நமது மாவட்டம் இலாபம் தரும் மாவட்டமாக மாறிட செய்ய வேண்டியதென்ன என்பதில் கவனம் குவிப்பொம். வருவாய் பெருக்க உருப்படியான வழிகளை கண்டறிவோம். அவசியமெனில் இயக்கம் நடத்த திட்டமிடுவோம்.
BSNLEU சங்கத்தின் ஊழியர் பாதக உடன்பாடுகளை விளக்கிடுவோம். நாம் முன் வைக்கும் மாற்றுகளை எடுத்துரைப்போம்.
செலவு சிக்கனமான மாலைநேர கூட்டங்களாக அமைக்கலாம். BWA தலைவர்கள் அனைவரும் பயன்படும் கூட்டமாக அமைந்திடவேண்டும்.
வாழ்த்துக்கள்
அன்பன் பட்டாபி 17-8-10

Thursday, August 5, 2010
தோழர்களே!
வணக்கம். ஆக 14 கிளைச் செயலர்கள் கூட்டத்தை திட்டமிட்டு வெற்றிப்பெற செய்திட பணியாற்றி வருவீர்கள் என கருதுகிறோம். நமது வேலைமுறையில் புதுப்பாங்கினை கொணர ஆக 14 உதவும். செயல் முடுக்கம் -அடிமட்ட உறுப்பினர்களின் தேவை குறித்த உணர்வும் பலப்படும். தமிழகத்தில் நமது அனைத்து தலைவர்களும் கூடி விவாதிப்பது உற்சாகத்தை கூட்டும். ஆக உயர் விடயம் தொட்டு நம் அளவிலான பிரச்சனைகள்வரை கவனப்படுத்தல் நடைபெற வேண்டியது அவசியமானது.
மாவட்ட செயலர்களும் மாநில சங்க நிர்வாகிகளும் ஒருங்கிணைப்பையும் ஒத்திசைவையும் மேம்படுத்த உள்ளனர். வாழ்த்துக்கள் தோழர்களே!

Thursday, July 15, 2010
Wednesday, July 7, 2010
*1-1-07க்குப் பின்னர் ஓய்வு பெற்றவரின் நிலுவை மற்றும் லீவ் சாலரி போன்றவற்றை காலதாமதமின்றி வழங்கிட மாநில நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம். மாவட்ட செயலர்கள் உதவிட வேண்டுகிறோம்
* கட்டிடம் எழுந்து வருகிறது. ஆக 15 வரை புரவலர் நிதி வரவேற்கப்படுகிறது. புரவலர்கள் பெயர்கள் நிரந்தரமாக நமது கட்டிடத்தில் நிலைபெறும். தேவையெல்லாம் 8 லட்சம் மட்டுமே. முயன்றால் சாத்தியமே. நம்மால் இயலாத எதையும் நாம் நிகழ்ச்சி நிரலில் ஏற்றுவதில்லை.
* விருதுநகரில் நமது தோழர் சுகுமார் காண்ட்ராக்ட் காலிகளால் தாக்கப்பட்ட அருவருப்பான நிகழ்வு நடந்துள்ளது. நமது மாவட்ட சங்கம் மற்ற சங்கங்களையும் இணைத்து நியாயம் கேட்டு போராடி வருகிறது.விருதுநகரில் காண்ட்ராக்ட் கும்பல் நமது அலுவலகத்தில் பெறும் ராஜமரியாதைகளை மாநில நிர்வாகத்திடம் கவனப் படுத்தியுள்ளோம். உரிய நடவடிக்கைக்கு வற்புறுத்தியுள்ளோம்

Thursday, July 1, 2010
Wednesday, June 30, 2010
தோழர்களே
வணக்கம். தர்மபுரியில் நடந்த செயற்குழு பயனுள்ள விவாதங்களை நடத்தியுள்ளது. நமது தலைவர்களின் விவாத திறன் மெருகேறியுள்ளதை பார்க்கமுடிந்தது.
பி எஸ் என் எல் காக்கும் போரில் அனைத்து சங்கங்களும் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்கவேண்டிய அவசியமுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அலட்சியமும் இறுமாப்பும் ஒற்றுமை குலைப்பான்கள். அனைவரையும் அனைத்து செல்வது என்பது மட்டுமே நம் வெற்றிக்கான துவக்கப்புள்ளி.
பொதுத்துறை அடையாள அழிப்பு வேகம் பெற்று வருகிறது. தொழிற்சங்க விவேகமும் விறுவிறுப்பும் அதிகரிக்கவேண்டிய நேரம். காலம் நம்மிடம் தந்துள்ள நிகழ்ச்சிநிரலை நேர்மையாகவும் பற்றுறுதியுடனும் எதிர்கொள்வோம்

Monday, June 21, 2010
மாவட்ட செயலர்களுக்கு
தோழர்களே
வணக்கம். தர்மபுரி மாநில செயற்குழுவில் ஊழியர் பிரச்சனைகளை முழுமையாக விவாதிக்க விழைகிறோம். எம்மாதிரி ஊதிய அனாமலி, 04-09 காலத்தில் பதவிஉயர்வு பெறுவோர் எவ்வளவு- பதவி உயர்வு திட்டத்தால் ஏதாவது பாதிப்பு வந்துள்ளதா போன்றவை விவாதிக்கப்படவேண்டும்.
கட்டிட நிதி, நன்கொடை ஆகியவற்றை கட்டாயம் கொணரவேண்டும்.
மா.செ 18-6-10

Sunday, June 6, 2010
Thursday, June 3, 2010
NFTE BSNL
TAMIL NADU CIRCLE
மாநில செயற்குழு
ஜூன் 25-26 தர்மபுரி
தலைமை: தோழர் தமிழ்மணி மா.த
வரவேற்புரை: தோழர் நூருல்லா மா.து.செ
அஞ்சலி: தோழர் மணி மா.செ தர்மபுரி
துவக்கவுரை: தோழர் ஜெயபால் மா.து.த
பொருளாய்வு:
1. தஞ்சை மாநில மாநாடு
2. பாட்னா அகில இந்திய மாநாடு
3. ஊதிய மாற்ற உத்தரவு
4. பதவி உயர்வு உத்தரவு
5. ஊழியர் புதிய அளவீடுகள்
6. தொழிற்சங்க தேர்தல்
7. தஞ்சை வரவேற்புக்குழு வரவு-செலவு அறிக்கை- பாராட்டு
8. கட்டிட நிதி
9. ஊதிய மாற்ற நிலுவை நன்கொடை
10. மத்திய செயற்குழு-டெல்லி
11. பிற
சிறப்புரை: தோழர் ஜெயராமன் சம்மேளன செயலர்
தோழர் S S கோபாலகிருஷ்ணன்
அமைப்புசெயலர்
2-6-2010 தோழமையுடன்,
ஆர்.பட்டாபிராமன்
மா செ NFTE BSNL

Wednesday, May 19, 2010
Sunday, May 16, 2010
Tuesday, May 11, 2010
மே 27-கடலூரில் சங்கமிப்போம்
அனைத்திந்திய தலைவர்களுக்கு பாராட்டு பெருவிழா
தோழர் சந்தேஷ்வர்சிங்
தோழர் C K மதிவாணன்
தோழர் G ஜெயராமன்
தோழர் S Sகோபாலகிருஷ்ணன்
நிர்வாகிகளை பாராட்டி நமது தலைவர்கள்
ஆர் கே முத்தியாலு மாலி சேது ரகு
சந்திரசேகர் உரையாற்றவுள்ளனர். அனைத்திந்திய தலைவர்கள் பாராட்டை ஏற்று சிறப்புரை நல்க உள்ளனர்.
திரளாக பங்கேற்போம்!

Friday, May 7, 2010
ஒப்பந்த ஊழியர்களுக்கு மத்திய தொழிலாளர் அமைச்சக குறைந்தபட்ச ஊதிய அரசிதழ் அறிவிப்பு நமது ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என்ற உத்தரவு வெளியாகியுள்ளது.பகுதிக்கேற்ற ரூ 120, 150, 180 உடன் கிராக்கிப்படி இணைக்கப்பட்டு தரப்படவேண்டும். தொடர்ந்த போராட்டங்களும், பாட்னா வந்த அமைச்சரிடம்(ஹரிஷ் ராவத்திடம்) நாம் முறையிட்டதும், நாடளுமன்ற கேள்விகளும் உத்தரவு வரக்காரணமாயின.
நிரந்தர ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என்பது மாநில தொழிலாளர் அமைச்சர்களின் ஏற்பிற்குப் பின்னர் குறிப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு கேபினட் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் ஹரிஷ் ராவத் தெரிவித்தார்
கிராக்கிப்படி பெற்றுத்தர முயற்சிப்போம்

Thursday, May 6, 2010
டி ஓ டி தனது ஒப்புதலை 5--5-2010 தேதியிட்டு வெளியிட்டுள்ளது. அதிகாரிகளின் ஊதியமாற்றத்துடன் முரண் கூடாது.ஓய்வூதியசுமை 60 சதத்திற்கு மேல் கூடாது என வழிகாட்டப்பட்டுள்ளது.78.2க்கு இடமளிக்கும் வகையில் வழிகாட்டுதல் அமைந்துள்ளது.
"All instructions/ guidelines issued by DPE/GOI in this regard from time to time may be scrupulously followed" என்று வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்படி உடனடியாக 78.2யையும் உள்ளடக்கிய உடன்பாட்டை ஏற்படுத்தி பி எஸ் என் எல் உத்தரவு வெளியிடமுடியும். ஜே யே சி முன்கை எடுத்திடவேண்டுகிறோம்

Tuesday, May 4, 2010
ஊதிய மாற்றம்
ஊதியமாற்ற வேலைகள் டி ஓ டியில் முடியும் தறுவாயில் உள்ளதாக அறிகிறோம். வேலைநிறுத்த வாக்குறுதிப்படி மே 5 (அ) 6 தேதிகளில் ஒப்புதல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
Wednesday, April 28, 2010
வேலைநிறுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் இரு பிரச்சனைகளில் முன்னேற்றகரமான வேலைகள் நடக்க துவங்கியுள்ளன என அறிகிறோம். ஊதிய பிரச்சனையில் டி ஓ டி தனது கடமையை விரைவில் முடிக்கும் என்ற உறுதிமொழியை பெற்றுள்ளோம். 1 கோடி விரிவாக்க ஆயத்த வேலைகள் துவங்கியுள்ளன. பென்ஷனில் ஜேஏசி கவனமாக இருப்பது நல்லது. கூட்டாக குறிப்பொன்றை தருவது பாதுகாப்பானது.
Monday, April 26, 2010
Staff Norms
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கைக்கான பணிஅளவீடுகளை தலைமை நிர்வாகம் ஏப்ரல்23 அன்று வெளியிட்டுள்ளது. மே7க்குள் மாநிலங்கள் கணக்கீடுகளை செய்து அனுப்பிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட் செயலர்கள் தங்கள் மாவட்டத்தில் கணக்கீடுகள் நடந்ததா - புதிய கணக்கீட்டின்படி உபரி வருகிறதா -எவ்வளவு என்பதை அறிந்து தெரிவிக்கவேண்டுகிறோம்.
வி ஆர் எஸ் க்கான போராட்டத்தில் ஒன்றாக நின்ற தொழிற்சங்க தலைமை அளவீடுகள் குறித்து பரிசீலித்து தங்களது எதிர்வினையை ஆற்றவேண்டிய கடமையில் உள்ளது. ஜே யே சி உடனடியாக கூடி போராட்ட உறுதிமொழிகள் குறித்தும் Staff Norms குறித்தும் கவனம் செலுத்தவேண்டுகிறோம். த்மிழகத்தில் அளவீடுகள் குறித்து நிர்வாகத்துடன் பேசவிருக்கிறோம்

Friday, April 23, 2010
Monday, April 19, 2010
Saturday, April 17, 2010
வேலைநிறுத்தம் பேச்சுவார்த்தை
தலைவர்கள் வேலைநிறுத்தகோரிக்கைகளை தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.ஏப்ரல் 1 அன்று DOT செயலரிடமும், ஏப்ரல் 16 அன்று அமைச்சரிடமும் விவாதித்துள்ளனர். DOT செயலர் கூட்டக்குறிப்பு உறுதிமொழி எதையும் தரவில்லை.அமைச்சர் கூட்டக்குறிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
VRS, பங்குவிற்பனை பிரச்சனைகள் அமைச்சர்கள் குழு மட்டத்தில் விவாதப் பொருளாகிறது. பின்னர்தான் முடிவு எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. ITS, பென்ஷன் பிரச்சனை தீர்விற்கு 3 மாதம் அவகாசம் தேவைப்படுகிறது என சொல்கிறார்கள்.
டெண்டர் விவகாரத்தில் 93 மில்லியன் முடிந்த கதையாக தெரிகிறது. Managed Capacity என்கிற MNCகளுக்கு ஆதரவான முறைக்கு முயற்சிகள் நடைபெறுகிறது. Unbundling பிரச்சனையில் அரசு முடிவெடுப்பதற்குள் BSNL அனைத்து cableகளையும் பயன்படுதிக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நிலைமைகளை பரிசீலித்து முடிவெடுத்திட தலைவர்கள் 19-4-10 காலை கூடவிருக்கின்றனர்.

Friday, April 16, 2010
அமைச்சருடன் சந்திப்பு
அனைத்து சங்கத் தலைவர்களும் போராட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் விவாதித்துள்ளனர். விவாத குறிப்பு கிடைத்தவுடன் JAC கூடவிருக்கிறது
Wednesday, March 31, 2010
அகில இந்திய மாநாடு பாட்னா
தோழர்களே!
பாட்னா மாநாடு Telegraph Recreation Club, GPO வில் நடைபெறவுள்ளது. பாட்னா இரயில் நிலையத்திற்கு மிக அருகாமையில் venue அமைக்கப்பட்டுள்ளது. தங்குமிடம் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாட்னாவில் volunteers நம்மை அழைத்து செல்ல வேண்டியுள்ளோம்.
மாநில செயலர் சந்தேஷ்வர் சிங்கின் தொடர்பு எண் 09431041654

Monday, March 29, 2010
அனைத்து மாநில செயலர்கள் கூட்டம் 29-3-10
அனைத்து மாநில செயலர்கள் கூட்டம் 29-3-10 அன்று நடந்தது. ஏப்ரல் 20 வேலைநிறுத்தத்திற்கான JAC அமைக்கப்பட்டுள்ளது. தலைவர், கன்வீனர், பொருளராக தோழர்கள் பட்டாபி, செல்லப்பா, வீரபாண்டியன் செயல்படுவர். அனைத்து மாநில செயலர்களும் JAC உறுப்பினர்கள். பெரிய மாவட்டங்களுக்கான JAC உறுப்பினர்களின் சுற்றுப்பயண திட்டம் அறிவிக்கப்படும். JAC 1-4-2010 அன்று கூடி சுற்றறிக்கையை முறையாக வெளியிடும்.
Tuesday, March 23, 2010
காலவரையற்ற வேலைநிறுத்தம்
ஏப்ரல் 20 துவங்கி காலவரையற்ற வேலைநிறுத்தம் என்ற அறிவிப்பை அனைத்து பொதுச்செயலர்களும் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர்.
கோரிக்கைகள்
• பங்குவிற்பனை செய்யாதே
• வி ஆர் எஸ்ஸை திணிக்காதே
• எமது காப்பர் இணைகளை தனியார் கம்பெனிகளுக்கு தாரைவார்க்காதே
• விரிவாக்கத்திற்கான கொள்முதலை உடனடியாக செய்திடு
• ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் உயர்வை உறுதி செய்
• அய் டி எஸ் உள்நுழைவு பிரச்சனையை தீர்
வேலைநிறுத்தம் வெல்லட்டும்

Saturday, March 20, 2010
மார்ச் 26 தர்ணா
அனைத்து தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று மார்ச் 26
தர்ணா போராட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்திருக்கிறது. பங்கேற்று வெற்றிகரமாக்குவோம்.

Friday, March 19, 2010
Sunday, March 14, 2010
Tuesday, March 9, 2010
புதிய மாநில சங்க பொறுப்பாளர்கள்
தலைவர்: S. தமிழ்மணி T M சென்னை
துணைதலைவர்கள்: R ஜெயபால் CSS குடந்தை
K ராஜமணிக்கம் SSS ஈரோடு
S பாலசுப்ரமணியன் STS தூத்துகுடி
S சிவசிதம்பரம் STS பட்டுக்கோட்டை
T ராமசாமி TM காரைக்குடி
செயலர்: R பட்டாபிராமன் STS சென்னை
துணைசெயலர்கள்: L சுப்பராயன் STS கோவை
H நூருல்லா TM சேலம்
S பாபநாசம் STS நெல்லை
K அசோக்ராஜ் TMபாண்டி
P சென்னகேசவன் TTA வேலூர்
S பழனியப்பன் TSOபுதுக்கோட்டை
K நடராஜன் TMதஞ்சை
பொருளாளர்: G ஜெயராமன் STS கடலூர்
அமைப்புசெயலர்கள்: M லட்சம் STS கம்பம்
N அன்பழகன் STSகடலூர்
N ராம்சேகர் TMவிருதுநகர்
G S முரளீதரன் SS சென்னை
N ராமகிருஷ்ணன் TM கோவை
இந்திராணி சுந்தரராஜ் STM மதுரை
சிறப்பு அழைப்பாளர்கள்: R ஸ்ரீதர் SS கடலூர்
V மணி SSS வேலூர்
C முனியன் TM கிருஷ்ணகிரி

Tuesday, March 2, 2010
Thursday, February 25, 2010
Sunday, February 21, 2010
Saturday, February 20, 2010
Saturday, February 13, 2010
பீடு நடையுடன் பிரின்ஸ் குழாம்
NFTE TAMILNADU
பீடு நடையுடன் பிரின்ஸ் குழாம்
தஞ்சையில் மாநாட்டு வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பொதுச்செயலர் பிரின்ஸ் மற்றும் மாவட்ட செயலர் நடராஜன் ஏராள தோழர்களுடன் நேரிடையாக களப்பணியில் நிற்கின்றனர். அனுபவம் வாய்ந்த மூத்த தோழர்கள் கேஎஸ்கே குடந்தை ஜெயபால் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இருமுறை தமிழ்மணியும் சேதுவும் தஞ்சை சென்று வரவேற்புக்குழு கூட்டத்தில் பங்கேற்று வேலைகளை பகிர்ந்து வந்துள்ளனர். ஜெயராமனும் பட்டாபியும் வரவேற்புக்குழு தோழர்களுடன் கலந்துரையாடி வந்துள்ளனர்.
திருவாரூரில் மூத்த தோழர் ராமதுரை ஏராள தோழர்களுடன் நிதி சேர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். மன்னார்குடியில் TMTCLU மாவட்ட செயலர் கிள்ளி தோழர்களின் உறுதுணையுடன், பட்டுக்கோட்டையில் சிவசிதம்பரம் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி பக்கிரி தலைமையிலும் தோழர்கள் செயல்வடிவமாகவே மாறியுள்ளனர். பெயர் சொல்லப்படவேண்டிய ஏராள தோழர்கள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். தேவையெல்லாம் நிதிதான். மற்ற மாவட்டங்கள் ஏற்றுக்கொண்ட நிதிதனை உடன் அனுப்பி வரவேற்புக்குழு தோழர்கள் கவலையிலிருந்து விடுபட உதவவேண்டும். கோவை மாவட்ட மாநாட்டில் முதல் தவணையாக ரூ 10000 தந்து உதவியுள்ளனர். சென்னை முரளி தன் கிளை சார்பில் 7000 தந்துள்ளார். தூத்துக்குடி பாலக்கண்ணன் 8000 வங்கி மூலம் அனுப்பியுள்ளார்.
தோழர் குப்தா தனது உடல் உபாதைகளை பற்றி பொருட்படுத்தவில்லை. நம் அழைப்பை கேட்டவுடன் நன்றி நிச்சயம் வருகிறேன் தோழர்களை பார்க்க வேண்டும் என்றார். கண்ணீர் பெருகியது. தோழர் குப்தாவின் வரவு நம்மை பெருமளவு உற்சாகப்படுத்தும். நமது உன்னத தலைவர்கள் அனவரும் வர இசைந்துள்ளனர். பிற சங்க மாநில செயலர்கள் வாழ்த்த வருகின்றனர். CGM மற்றும் உயர் அதிகாரிகள் வந்து கருத்துரையாற்றப் போகிறார்கள். Angel of Change எனப் புகழ் பெற்றுள்ள Exnora நிர்மல் காலநிலைப்பற்றி பேசப்போகிறார். மகளிர் தின நூற்றாண்டு கொண்டாட்டம் நடைபெறப்போகிறது. திருமதி நளினிராவ் GM F நமது தோழியருடன் பங்கேற்கலாம்.
அழைப்பிதழ் வேலை நடந்துகொண்டிருக்கிறது.தோழர் சேது கவனித்து வருகிறார். தோழர் ஜெயராமன் நிதிஅறிக்கை வேலையில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். தணிக்கை வேலை துவங்கயிருக்கிறது. மாநில செயலர் செயலறிக்கை வேலையை ஜெயராமன் உதவியுடன் செய்து வருகிறார். பிப்ரவரி ஒலிக்கதிர் வேலையில் ஜெயபால் உதவி வருகிறார். அன்றாட ஊழியர் பிரச்சனைகளை தமிழ்மணியும் முரளியும் கவனித்து வருகின்றனர். இணையதள வேலைகள் வேலூர் இணையதள செய்திகளால் சற்று மட்டுப்பட்டுள்ளன.
மாநாட்டு வேலைகளுக்கு முன்னுரிமை என தோழர்கள் இயங்கத் துவங்கியிருப்பதே நமது பலம். ONE PIECE என்ற குப்தாவின் முழக்கத்தை நமது தலைவர்கள் மாலியும் தமிழ்மணியும் கடந்த மாநாட்டில் நிருபித்தனர். அனத்து மாநாடுகளுமே அக்கடமையை நமக்கு அளிக்கின்றன.. நிறைவேற்றவேண்டிய நிலையில் இன்று நாம்.
தோழர் ஆர் கே பொதுச்செயலராகயிருந்து கேஎஸ்கே-ஜெயபால் மற்றவருடன் தஞ்சையில் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக்காட்டியுள்ளார். தோழர் வீரபாண்டி பொதுச்செயலராகயிருந்து கேஎஸ்கே- பட்டாபி-துரையரசன் மற்றவருடன் சம்மேளன கவுன்சிலை சிறக்க நடத்தியுள்ளார். இன்று பிரின்ஸ்- நடராஜன் தலைமுறை அனைத்தையும் விஞ்சும் வகையில் செயலாற்றி வருகிறது. வெல்லட்டும் இளந்தோள்கள்..சுமைவலி தெரியாமல் சற்று நாமும் தோள் கொடுப்போம்.
14-2-2010

Friday, February 12, 2010
BSNL நிர்வாக தலைமை குறித்து
BSNL CMD பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு PSEB பரிசீலனையில் இருக்கின்றன.நிர்வாகம் வருவாய் இலாபம் பெருகி நடப்பதற்கு தலைமைக்கு முக்கிய பங்கு இருக்கிறது . இல்லையென மறுக்கமுடியாது. தொழிற்சங்கம் என்ற முறையில் மாற்றுகளை முன்மொழியவும் ந்மக்கு உரிமை இருக்கிறது.
நந்தன் நிலெங்கனி, ஸ்ரீதரன் போன்ற வசீகர தலைமை வேண்டும் என SNEA தலைமை தெரிவித்துள்ளது-பேட்டியளித்துள்ளது.நந்தன் ஸ்ரீதரன் தேர்ந்த நிர்வாகிகள்.தான் விரும்பும் மாற்றங்கள் குறித்து அருமையான புத்தகம் கூட நந்தன் எழுதியிருக்கிறார். தனிநபருக்குள்ள பாத்திரமே சர்வரோக நிவாரணியாகிவிடாது.
PSEB உயர் அதிகாரிகளின் தேர்வுக்கென முறைகளை (Procedures)வைத்துள்ளது. அவற்றில் என்னென்ன மாற்றங்கள் தேவை-PSEBயிடமிருந்து selection அதிகாரத்தை யாருக்கு மாற்ற விரும்புகிறோம்- சாம் பிட்ரோடா போன்ற தனி நபருக்கா என்ற கேள்விகளுக்கான தெளிவு தேவைப்படுகிறது.
Empowering PSU என்பற்கான high Power அர்ஜுன் சென் கமிட்டி பல ஆலோசனைகளை உருப்படியாக சொல்லியிருக்கிறதே ..அதை அமுல்படுத்த சொல்லி அனவரும் போராடினால் என்ன?

Wednesday, February 10, 2010
Tuesday, February 9, 2010
Sunday, February 7, 2010
Saturday, February 6, 2010
நன்றி தோழர்களே!
முதுபெரும் தோழர் ஞானையா விழாவிற்கு திரளாக வந்திருந்த மாவட்ட செயலர்கள் மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்களுக்கு நன்றி. பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு நன்றி. மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்த கோவை மாவட்ட சங்கத்திற்கு நன்றி.
Thursday, February 4, 2010
Wednesday, February 3, 2010
Tuesday, February 2, 2010
MTNL ஊதிய மாற்றம்
MTNL ஊதிய மாற்றம் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. BSNL பரிந்துரைகளுடன் ஊதிய நிலைகளை ஒப்பிட்டு பார்க்கவும்.
Monday, February 1, 2010
மாநில மாநாடு
மாநில மாநாடு அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் கிளை செயலர்கள் சஙக தகவல் பலகையில் அறிவிப்பை எடுத்து ஒட்டுமாறு வேண்டுகிறோம்.
Saturday, January 30, 2010
மாநிலமாநாடு வரவேற்புக்குழு கூட்டம்
மாநில மாநாடு திட்டமிட்டப்படி மார்ச் 7,8 தேதிகளில் தஞ்சையில் நடைபெறுகிறது. செயற்குழு மார்ச் 6 கூடுகிறது.வரவேற்புக் குழு 29-1-2010 அன்று தஞ்சையில் கூடி நிதி ஆதாரங்களை பரிசீலித்தது.
வரவேற்புக் குழு கூட்டத்தில் தோழர்கள் தமிழ்மணி, பட்டாபி, ஜெயராமன், ஜெயபால், சேது நேரிடையாக பங்கேற்றனர். வரவேற்புக் குழு பொதுச் செயலர் பிரின்ஸ், மாவட்ட செயலர் நடராஜன், குடந்தை பாஸ்கரன் நடந்த – நடக்க வேண்டிய வேலைகளை விளக்கிப் பேசினர். மாவட்டத்தின் முன்னோடி தலைவர்கள் நிதி ஆதாரங்களுக்கான உத்தரவாதத்தை நல்கினர்.
மாநாட்டு மண்டபம், தங்கும் வசதி, பெண்களுக்கான வசதி, உணவு, விளம்பரம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து அனுபவங்களை தமிழ்மணி, பட்டாபி, ஜெயராமன், ஜெயபால், சேது பகிர்ந்து கொண்டனர். வரவேற்புக் குழுவிற்கு அனத்துவகை உதவிகளையும் செய்திட உறுதி அளித்து உற்சாகமூட்டினர்.
தோழர் குப்தா, சஜ்வானி, கோஹ்லி, இஸ்லாம், மதிவாணன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களை அழைப்பது- நமது தலைவர்கள் ஆர் கே, முத்தியாலு, மாலியுடன் தொழிற்சங்க தலைவர்கள் ஏ எம் கோபு மற்றும் எஸ் எஸ் தியாகராஜனை பங்கேற்க செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. பிற மாநில செயலர்களை அழைப்பது -கருத்தரங்கில் மாநில மட்ட மற்றும் தஞ்சை அதிகாரிகளையும், மகளிர் தின நிகழ்வு- காலநிலை மாற்ற சிறப்பு கருத்தரங்கினை ஏற்பாடு செய்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டை தோழர் ஆர் கே வை துவக்கி வைக்க வேண்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
விளம்பர அம்சங்களுக்கு ஜெயபால், அச்சடிப்பிற்கு சேது வழிகாட்டுவர். பிப்ரவரி 10 அன்று வரவேற்புக் குழு அடுத்து கூடும். தோழர்கள் ஜெயராமன் சேது ஜெயபால் வந்திருந்து வழிகாட்டுவர்.
மாவட்ட செயலர்கள் சார்பாளர்கள் எண்ணிக்கை குறித்து உடன் தெரிவிக்க வேண்டுகிறோம். தங்கள் பங்கிற்கான நிதிதனை அனுப்ப வேண்டுகிறோம்.
30-1-2010

Thursday, January 28, 2010
கிராக்கிப்படி உத்தரவு
கிராக்கிப்படி உத்தரவு 1997 ஊதிய நிலைகளில் உள்ளோருக்கும் DPE ஆல் 28-01-10 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
Wednesday, January 27, 2010
மாநிலச் செயலர் உண்ணாநோன்பு அறிவிப்பு
காரைக்குடி மாவட்டச்செயலர் தோழர் மாரி பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. குறையை சரிசெய்து காரைக்குடியில் பதவி உயர்வு தரக்கோரி பிப்ரவரி 1 முதல் மாநிலச் செயலர் உண்ணாநோன்பு போராட்டத்தை அறிவித்து நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளார். போராட்டத்தை வெற்றிகரமாக்கிடுவோம்
27-1-10
27-1-10
Monday, January 25, 2010
துறைமுக ஊதிய உடன்பாடு
மாவட்ட செயலர்களுக்கு
தோழர்களே,
வணக்கம். மாநில மாநாட்டு வேலைகளில் தஞ்சை தோழர்கள் ஈடுபாட்டுடன் இறங்கியுள்ளனர். மார்ச் 6 மாலை செயற்குழு நடைபெறும். மார்ச் 7,8 நாட்களில் மாநாடு. மாவட்ட செயலர்கள் எவ்வளவு தோழர்கள் வருவர் என்பதை பிப்ரவரி 10க்குள் வரவேற்பு குழுவிற்கு/ மாநில சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். மாநாடு திட்டமிடலுக்கு இவ்விவரம் அவசியம்.
மாவட்டங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரைவில் ஒப்படைக்க வேண்டுகிறேன்.
அன்புடன்,
பட்டாபி 25-1-10

Sunday, January 24, 2010
முழு ஓய்வூதியம்
33 வருடங்கள் இருந்தால் மட்டுமே முழு ஓய்வூதியம் என்பதை தளர்த்தி பென்ஷன் இலாகா வெளியிட்ட (10-12-09) உத்தரவை DOT வழிகாட்டுதலில் BSNL endorse(22-1-2010)செய்துள்ளது. 1-1-2006 முதல் இந்த தளர்வு அமுலாகும்
Thursday, January 21, 2010
DA உத்தரவு
அதிகாரிகளுக்கு கிராக்கிப்படி 5.6 சத (25.3-30.9) உத்தரவு ஜன 19 அன்று பி எஸ் என் எல் ஆல் வெளியிடப்பட்டுள்ளது
Wednesday, January 20, 2010
BHEL ஊதிய உடன்பாடு
BHEL ஊதிய உடன்பாட்டில் AITUC, CITU, BMS கையெழுத்திடவில்லை . INTUC, DMK,HMS மட்டுமே 30 சதம் 78.2 10 ஆண்டுகள் ஏற்று MOU ல் கையெழுத்திட்டுள்ளன. AITUC, CITU, BMS 5 ஆண்டுகள் கோரி வற்புறுத்தி வருகின்றன. 5 ஆண்டுகள் எனில் 20 சதம் மட்டுமே என்றது நிர்வாகம்
Subscribe to:
Posts (Atom)