அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Wednesday, February 9, 2011

Thursday, February 3, 2011

கலங்காதே தோழா தோல்வியும் உரமூட்டும்!

கடந்து வந்த நாட்களில் அஞ்சாமல் அலுப்பில்லாமல் நீ செய்திட்ட பணிகள் ஏராளம். அப்பணிகள் தேர்தலால் முடிந்து போகவில்லையே! தொடர்வதற்கு உன்னை வரித்துக் கொள்.

தொழிற்சங்க வேலையில் ஒரு பகுதி மட்டுமே தேர்தல். தேர்தலுக்காக மட்டுமே நமது தொழிற்சங்கத்தை நாம் துவக்கவில்லை. அதன் நீண்ட மரபுத் தொடர்ச்சியின் இன்றைய வாரிசுகள் நாம் என்ற எண்ணம் மேலோங்கட்டும். அது மாபெரும் விடுதலைக்கான பாதை. தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான பாதை. அது தேர்தல் எனும் முட்டுச்சந்துகளில் முடிவதில்லை.

வழக்கம் போல் சுறுசுறுப்பாக உற்சாகத்துடன் செயல்படு; அனைவருக்கும் நன்றி அறிவிப்பை நேரடியாக சென்று சொல். எந்த சக ஊழியரையும் சந்தேகப்பட வேண்டாம். ”எனக்கு வாக்களிக்கவில்லையே கவனித்துக் கொள்கிறேன்” என்றெல்லாம் வாக்குவாதங்களில் இறங்க வேண்டாம்.

தேர்தல் நாளன்று மருத்துவமனையில் இருந்து வலி வேதனை உபாதைகளை பொருட்படுத்தாமல் சலைன் பாட்டிலுடனும் சக்கர நாற்காலியுடனும் வந்து வாக்களித்த பெரு உள்ளங்கள் பரவசமூட்டுகின்றன. அவர்களுக்கெல்லாம் மாநில சங்கத்தின் தாள் பணிந்த வணக்கங்கள்.

ஏராள வேலைகள் முன் நிற்கின்றன. கடமைகளால் காலத்தை எதிர் கொள்வோம். முன்னேற்றங்கள் குறுக்கு வழிகளால் வருவதில்லை. தொழிலாளி வர்க்க உணர்வென்பது வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. தனி நபர் தாக்குதல்கள் தேவையில்லை. நமது கொள்கை- நிலைபாட்டின் வழி நின்று விவாதத்தை தொடருவோம். BSNL தொழிற்சங்க இயக்கங்கள் வெறுப்பை வெளியேற்றக் கற்றுக்கொள்ளட்டும்.
4-2-2011 நம்பிக்கையுடன், அன்பன் பட்டாபி