அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Wednesday, June 30, 2010

தோழர்களே
வணக்கம். தர்மபுரியில் நடந்த செயற்குழு பயனுள்ள விவாதங்களை நடத்தியுள்ளது. நமது தலைவர்களின் விவாத திறன் மெருகேறியுள்ளதை பார்க்கமுடிந்தது.

பி எஸ் என் எல் காக்கும் போரில் அனைத்து சங்கங்களும் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்கவேண்டிய அவசியமுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அலட்சியமும் இறுமாப்பும் ஒற்றுமை குலைப்பான்கள். அனைவரையும் அனைத்து செல்வது என்பது மட்டுமே நம் வெற்றிக்கான துவக்கப்புள்ளி.

பொதுத்துறை அடையாள அழிப்பு வேகம் பெற்று வருகிறது. தொழிற்சங்க விவேகமும் விறுவிறுப்பும் அதிகரிக்கவேண்டிய நேரம். காலம் நம்மிடம் தந்துள்ள நிகழ்ச்சிநிரலை நேர்மையாகவும் பற்றுறுதியுடனும் எதிர்கொள்வோம்

Monday, June 21, 2010

மாவட்ட செயலர்களுக்கு

தோழர்களே
வணக்கம். தர்மபுரி மாநில செயற்குழுவில் ஊழியர் பிரச்சனைகளை முழுமையாக விவாதிக்க விழைகிறோம். எம்மாதிரி ஊதிய அனாமலி, 04-09 காலத்தில் பதவிஉயர்வு பெறுவோர் எவ்வளவு- பதவி உயர்வு திட்டத்தால் ஏதாவது பாதிப்பு வந்துள்ளதா போன்றவை விவாதிக்கப்படவேண்டும்.
கட்டிட நிதி, நன்கொடை ஆகியவற்றை கட்டாயம் கொணரவேண்டும்.
மா.செ 18-6-10

Thursday, June 3, 2010

NFTE BSNL
TAMIL NADU CIRCLE
மாநில செயற்குழு
ஜூன் 25-26 தர்மபுரி

தலைமை: தோழர் தமிழ்மணி மா.த
வரவேற்புரை: தோழர் நூருல்லா மா.து.செ
அஞ்சலி: தோழர் மணி மா.செ தர்மபுரி
துவக்கவுரை: தோழர் ஜெயபால் மா.து.த

பொருளாய்வு:
1. தஞ்சை மாநில மாநாடு
2. பாட்னா அகில இந்திய மாநாடு
3. ஊதிய மாற்ற உத்தரவு
4. பதவி உயர்வு உத்தரவு
5. ஊழியர் புதிய அளவீடுகள்
6. தொழிற்சங்க தேர்தல்
7. தஞ்சை வரவேற்புக்குழு வரவு-செலவு அறிக்கை- பாராட்டு
8. கட்டிட நிதி
9. ஊதிய மாற்ற நிலுவை நன்கொடை
10. மத்திய செயற்குழு-டெல்லி
11. பிற

சிறப்புரை: தோழர் ஜெயராமன் சம்மேளன செயலர்
தோழர் S S கோபாலகிருஷ்ணன்
அமைப்புசெயலர்


2-6-2010 தோழமையுடன்,
ஆர்.பட்டாபிராமன்
மா செ NFTE BSNL