அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Friday, January 18, 2013

ஜனவரி 18


ஜனவரி 18 அன்று சென்னயில் அனத்து தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்று தோழர் குப்தாவிற்கு புகழஞ்சலி செய்தனர். தமிழ் மாநில சங்கம் சார்பில் நடந்த  கூட்டத்திற்கு ஊழியர்கள், ஓய்வுபெற்ற தோழர்கள் திரளாக பங்கேற்று தோழ்ர் குப்தா மீதான தங்கள் பேரன்பை வெளிப்படுத்தினர்.

தோழர் தமிழ் மணி தலை தாங்கினார். தோழர்கள்  எஸ் எஸ் தியாகராஜன், மூர்த்தி , ஆர்.கே, ஆர் வி, ஜெயராமன், செல்லப்பா, சந்திரசேகர், ஏழுமலை, வீரராகவன்,சோமசுந்தரம், ராமராவ் மற்றும் பட்டாபி  தங்களது அமைப்புகளின் சார்பில் புகழஞ்சலி செய்தனர்.தோழர் சிவில் விஜயகுமார் கவிதாஞ்சலி செய்திட்டார்.மாநில சங்க பொருளர் அசோகராஜன், துணைசெயலர்கள் சென்னகேசவன், முரளி,தோழர் லோகநாதன், கடலூர் ஸ்ரீதர், மாவட்ட செயலர்கள் காமராஜ், மனோஜ்,ஆறுமுகம், அல்லிராஜா, திரளாக வேலூர், கடலூர், பாண்டி தோழர்கள் பங்கேற்றனர்.


Tuesday, January 15, 2013

Sunday, January 6, 2013

ஈடு இணையற்ற காவிய நாயகன் தோழர் குப்தாவின்  மறைவு சகாப்த முடிவாகவே உள்ளது. 60 ஆண்டுகால தூய தொண்டின் பேரடையாளம் குப்தா.  24 வயதில்  நுழைந்த நாள் துவங்கி 90 வயதிலும் மறைந்த நிமிடம்வரை நமக்காகவே நம் தொழிலாளர்க்கே தன்னை தன் வாழ்வை அர்ப்பணித்து கொண்ட  மகத்தான சக்தி அவர். கொடி தாழ்த்தி தலை வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.