அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Wednesday, June 30, 2010

தோழர்களே
வணக்கம். தர்மபுரியில் நடந்த செயற்குழு பயனுள்ள விவாதங்களை நடத்தியுள்ளது. நமது தலைவர்களின் விவாத திறன் மெருகேறியுள்ளதை பார்க்கமுடிந்தது.

பி எஸ் என் எல் காக்கும் போரில் அனைத்து சங்கங்களும் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்கவேண்டிய அவசியமுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அலட்சியமும் இறுமாப்பும் ஒற்றுமை குலைப்பான்கள். அனைவரையும் அனைத்து செல்வது என்பது மட்டுமே நம் வெற்றிக்கான துவக்கப்புள்ளி.

பொதுத்துறை அடையாள அழிப்பு வேகம் பெற்று வருகிறது. தொழிற்சங்க விவேகமும் விறுவிறுப்பும் அதிகரிக்கவேண்டிய நேரம். காலம் நம்மிடம் தந்துள்ள நிகழ்ச்சிநிரலை நேர்மையாகவும் பற்றுறுதியுடனும் எதிர்கொள்வோம்

No comments:

Post a Comment