அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Monday, August 16, 2010

தோழர்களே!
வணக்கம். இதயம் பூரித்த நன்றி. ஆக் 14 கிளைச்செயலர்கள் கூட்டம் பயனுள்ள வகையில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் நடந்தேறியுள்ளது. ஆக் 26 அன்று புதுச்சேரியில் கூடி மாநில சங்கம் கிளைச்செயலர்கள் தெரிவித்த கருத்துகளை ஒருமுகப்படுத்திக்கொள்ள இருக்கிறது.

ஆக் 21-25 நாட்களில் NFTE FNTO சந்திப்பு சிறப்புக்கூட்டங்களை நடத்திடவேண்டும். மாவட்ட சேவை மேம்பாட்டிற்கு தடையாகவுள்ள பிரச்சனைகளை தொகுத்து நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்திட வேண்டும். நமது மாவட்டம் இலாபம் தரும் மாவட்டமாக மாறிட செய்ய வேண்டியதென்ன என்பதில் கவனம் குவிப்பொம். வருவாய் பெருக்க உருப்படியான வழிகளை கண்டறிவோம். அவசியமெனில் இயக்கம் நடத்த திட்டமிடுவோம்.

BSNLEU சங்கத்தின் ஊழியர் பாதக உடன்பாடுகளை விளக்கிடுவோம். நாம் முன் வைக்கும் மாற்றுகளை எடுத்துரைப்போம்.

செலவு சிக்கனமான மாலைநேர கூட்டங்களாக அமைக்கலாம். BWA தலைவர்கள் அனைவரும் பயன்படும் கூட்டமாக அமைந்திடவேண்டும்.

வாழ்த்துக்கள்
அன்பன் பட்டாபி 17-8-10

No comments:

Post a Comment