அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Saturday, April 17, 2010

வேலைநிறுத்தம் பேச்சுவார்த்தை

தலைவர்கள் வேலைநிறுத்தகோரிக்கைகளை தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.ஏப்ரல் 1 அன்று DOT செயலரிடமும், ஏப்ரல் 16 அன்று அமைச்சரிடமும் விவாதித்துள்ளனர். DOT செயலர் கூட்டக்குறிப்பு உறுதிமொழி எதையும் தரவில்லை.அமைச்சர் கூட்டக்குறிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
VRS, பங்குவிற்பனை பிரச்சனைகள் அமைச்சர்கள் குழு மட்டத்தில் விவாதப் பொருளாகிறது. பின்னர்தான் முடிவு எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. ITS, பென்ஷன் பிரச்சனை தீர்விற்கு 3 மாதம் அவகாசம் தேவைப்படுகிறது என சொல்கிறார்கள்.

டெண்டர் விவகாரத்தில் 93 மில்லியன் முடிந்த கதையாக தெரிகிறது. Managed Capacity என்கிற MNCகளுக்கு ஆதரவான முறைக்கு முயற்சிகள் நடைபெறுகிறது. Unbundling பிரச்சனையில் அரசு முடிவெடுப்பதற்குள் BSNL அனைத்து cableகளையும் பயன்படுதிக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நிலைமைகளை பரிசீலித்து முடிவெடுத்திட தலைவர்கள் 19-4-10 காலை கூடவிருக்கின்றனர்.

No comments:

Post a Comment