அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Saturday, February 13, 2010

பீடு நடையுடன் பிரின்ஸ் குழாம்

NFTE TAMILNADU
பீடு நடையுடன் பிரின்ஸ் குழாம்

தஞ்சையில் மாநாட்டு வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பொதுச்செயலர் பிரின்ஸ் மற்றும் மாவட்ட செயலர் நடராஜன் ஏராள தோழர்களுடன் நேரிடையாக களப்பணியில் நிற்கின்றனர். அனுபவம் வாய்ந்த மூத்த தோழர்கள் கேஎஸ்கே குடந்தை ஜெயபால் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இருமுறை தமிழ்மணியும் சேதுவும் தஞ்சை சென்று வரவேற்புக்குழு கூட்டத்தில் பங்கேற்று வேலைகளை பகிர்ந்து வந்துள்ளனர். ஜெயராமனும் பட்டாபியும் வரவேற்புக்குழு தோழர்களுடன் கலந்துரையாடி வந்துள்ளனர்.
திருவாரூரில் மூத்த தோழர் ராமதுரை ஏராள தோழர்களுடன் நிதி சேர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். மன்னார்குடியில் TMTCLU மாவட்ட செயலர் கிள்ளி தோழர்களின் உறுதுணையுடன், பட்டுக்கோட்டையில் சிவசிதம்பரம் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி பக்கிரி தலைமையிலும் தோழர்கள் செயல்வடிவமாகவே மாறியுள்ளனர். பெயர் சொல்லப்படவேண்டிய ஏராள தோழர்கள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். தேவையெல்லாம் நிதிதான். மற்ற மாவட்டங்கள் ஏற்றுக்கொண்ட நிதிதனை உடன் அனுப்பி வரவேற்புக்குழு தோழர்கள் கவலையிலிருந்து விடுபட உதவவேண்டும். கோவை மாவட்ட மாநாட்டில் முதல் தவணையாக ரூ 10000 தந்து உதவியுள்ளனர். சென்னை முரளி தன் கிளை சார்பில் 7000 தந்துள்ளார். தூத்துக்குடி பாலக்கண்ணன் 8000 வங்கி மூலம் அனுப்பியுள்ளார்.

தோழர் குப்தா தனது உடல் உபாதைகளை பற்றி பொருட்படுத்தவில்லை. நம் அழைப்பை கேட்டவுடன் நன்றி நிச்சயம் வருகிறேன் தோழர்களை பார்க்க வேண்டும் என்றார். கண்ணீர் பெருகியது. தோழர் குப்தாவின் வரவு நம்மை பெருமளவு உற்சாகப்படுத்தும். நமது உன்னத தலைவர்கள் அனவரும் வர இசைந்துள்ளனர். பிற சங்க மாநில செயலர்கள் வாழ்த்த வருகின்றனர். CGM மற்றும் உயர் அதிகாரிகள் வந்து கருத்துரையாற்றப் போகிறார்கள். Angel of Change எனப் புகழ் பெற்றுள்ள Exnora நிர்மல் காலநிலைப்பற்றி பேசப்போகிறார். மகளிர் தின நூற்றாண்டு கொண்டாட்டம் நடைபெறப்போகிறது. திருமதி நளினிராவ் GM F நமது தோழியருடன் பங்கேற்கலாம்.

அழைப்பிதழ் வேலை நடந்துகொண்டிருக்கிறது.தோழர் சேது கவனித்து வருகிறார். தோழர் ஜெயராமன் நிதிஅறிக்கை வேலையில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். தணிக்கை வேலை துவங்கயிருக்கிறது. மாநில செயலர் செயலறிக்கை வேலையை ஜெயராமன் உதவியுடன் செய்து வருகிறார். பிப்ரவரி ஒலிக்கதிர் வேலையில் ஜெயபால் உதவி வருகிறார். அன்றாட ஊழியர் பிரச்சனைகளை தமிழ்மணியும் முரளியும் கவனித்து வருகின்றனர். இணையதள வேலைகள் வேலூர் இணையதள செய்திகளால் சற்று மட்டுப்பட்டுள்ளன.
மாநாட்டு வேலைகளுக்கு முன்னுரிமை என தோழர்கள் இயங்கத் துவங்கியிருப்பதே நமது பலம். ONE PIECE என்ற குப்தாவின் முழக்கத்தை நமது தலைவர்கள் மாலியும் தமிழ்மணியும் கடந்த மாநாட்டில் நிருபித்தனர். அனத்து மாநாடுகளுமே அக்கடமையை நமக்கு அளிக்கின்றன.. நிறைவேற்றவேண்டிய நிலையில் இன்று நாம்.

தோழர் ஆர் கே பொதுச்செயலராகயிருந்து கேஎஸ்கே-ஜெயபால் மற்றவருடன் தஞ்சையில் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக்காட்டியுள்ளார். தோழர் வீரபாண்டி பொதுச்செயலராகயிருந்து கேஎஸ்கே- பட்டாபி-துரையரசன் மற்றவருடன் சம்மேளன கவுன்சிலை சிறக்க நடத்தியுள்ளார். இன்று பிரின்ஸ்- நடராஜன் தலைமுறை அனைத்தையும் விஞ்சும் வகையில் செயலாற்றி வருகிறது. வெல்லட்டும் இளந்தோள்கள்..சுமைவலி தெரியாமல் சற்று நாமும் தோள் கொடுப்போம்.

14-2-2010

No comments:

Post a Comment