அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Friday, February 12, 2010

BSNL நிர்வாக தலைமை குறித்து

BSNL CMD பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு PSEB பரிசீலனையில் இருக்கின்றன.நிர்வாகம் வருவாய் இலாபம் பெருகி நடப்பதற்கு தலைமைக்கு முக்கிய பங்கு இருக்கிறது . இல்லையென மறுக்கமுடியாது. தொழிற்சங்கம் என்ற முறையில் மாற்றுகளை முன்மொழியவும் ந்மக்கு உரிமை இருக்கிறது.
நந்தன் நிலெங்கனி, ஸ்ரீதரன் போன்ற வசீகர தலைமை வேண்டும் என SNEA தலைமை தெரிவித்துள்ளது-பேட்டியளித்துள்ளது.நந்தன் ஸ்ரீதரன் தேர்ந்த நிர்வாகிகள்.தான் விரும்பும் மாற்றங்கள் குறித்து அருமையான புத்தகம் கூட நந்தன் எழுதியிருக்கிறார். தனிநபருக்குள்ள பாத்திரமே சர்வரோக நிவாரணியாகிவிடாது.
PSEB உயர் அதிகாரிகளின் தேர்வுக்கென முறைகளை (Procedures)வைத்துள்ளது. அவற்றில் என்னென்ன மாற்றங்கள் தேவை-PSEBயிடமிருந்து selection அதிகாரத்தை யாருக்கு மாற்ற விரும்புகிறோம்- சாம் பிட்ரோடா போன்ற தனி நபருக்கா என்ற கேள்விகளுக்கான தெளிவு தேவைப்படுகிறது.
Empowering PSU என்பற்கான high Power அர்ஜுன் சென் கமிட்டி பல ஆலோசனைகளை உருப்படியாக சொல்லியிருக்கிறதே ..அதை அமுல்படுத்த சொல்லி அனவரும் போராடினால் என்ன?

No comments:

Post a Comment